பள்ளி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் போக்ஸோ சட்டம் பாய்ந்த ஆசிரியர்களுக்கு ஆதரவாக
சூலூர் கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் 4 பேர் மீது போக்ஸோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனை கண்டித்து கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆறாம் வகுப்பிலிருந்து 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள், தங்களது ஆசிரியர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது, நீதி வழங்க வேண்டும் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கேந்திரிய பள்ளி முதல்வர் மேகநாதன், ஆசிரியர்கள் அருணா, தமிழரசி, திவ்யா உள்ளிட்டோர் மீது அதே பள்ளியில் படிக்கும் மாணவர்கள் இருவர், தங்கள் மீது தனிப்பட்ட முறையில் வன்மம் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக அளித்த புகாரின் பேரில் சூலூர் போலீஸார் போக்ஸோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர். குறிப்பிட்ட இரண்டு மாணவர்கள் மீது ஏற்கனவே பல புகார்கள் மாணவர்கள் தரப்பில் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
No comments