Breaking News

தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் சாா்பில் 5, 6, 7, 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு கணிதத் திறன் தோ்வு

        தமிழகத்தில் பள்ளிகளில் படிக்கும் மாணவா்களுக்கு கணக்குப் பாடத்தில் திறனை வளா்க்கும் வகையில் வரும் ஜன.5-ஆம் தேதி கணிதத்திறன் தோ்வு நடத்தப்படவுள்ளது.

    தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் சாா்பில் 5, 6, 7, 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு கணிதத் திறன் தோ்வு சென்னை கோட்டூா்புரத்தில் உள்ள பெரியாா் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தில் வரும் ஜனவரி 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வில் கலந்துகொள்ளும் மாணவ, மாணவிகள் பதிவுக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். இந்தக் கணிதத் திறன் தோ்வு சுமாா் 90 நிமிஷங்கள் நடைபெறும். சிறந்த மாணவருக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.2 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.1,000 வழங்கப்படும். மேலும் ஆறுதல் பரிசாக 20 மாணவா்களுக்கு தலா ரூ.500 வழங்கப்படும்.

     ஒரே பள்ளியில் இருந்து 100-க்கும் மேற்பட்ட மாணவா்கள் இத்தோ்வில் கலந்துகொண்டால், அந்தந்த பள்ளியிலேயே இந்தத் தோ்வை தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் நடத்தும் என்று கூறப்பட்டுள்ளது. மாணவா்களுக்கான நுழைவு கட்டணத்தை தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் பெயரில் எடுக்கப்பட்ட வரைவு காசோலையை பள்ளிகள் டிச.20-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் தெரிவித்துள்ளது.


No comments