அரையாண்டு தேர்வு வினாத்தாளில் 'டிசம்பர் 2019'க்கு பதில் 'டிசம்பர் 2018'
விருதுநகரில் நடந்த அரையாண்டு தேர்வு உடற்கல்வி வினாத்தாளில் 2019 க்கு பதில் '2018' என அச்சாகி இருந்ததால் ஆசிரியர்கள், மாணவர்கள் குழப்பமடைந்தனர்.அரையாண்டு தேர்வில் உடற்கல்வி தேர்வு தொகுத்தறிவு தேர்வாக 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படுகிறது. 15 ஒரு மதிப்பெண் வினாக்கள், 2 மதிப்பெண் வினாக்கள் 5, 5 மதிப்பெண் வினா 1 என 30 மதிப்பெண்களுக்கு எழுத்து தேர்வு, 70 மதிப்பெண் செய்முறை தேர்வாக மேற்கொள்ளப்படுகிறது.
நேற்று நடந்த தேர்வு வினாத்தாளில் 2019க்கு பதில் 'டிசம்பர் 2018' என அச்சிடப்பட்டிருந்தது. மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது. இதே போன்று காலாண்டு தேர்விலும் '2018' என அச்சிடப்பட்டு இருந்ததாக உடற்கல்வி ஆசிரியர்கள் கூறினர். கவனக்குறைவால் 2018 என அச்சிடப்பட்டுவிட்டதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
No comments