2017-18 மற்றும் 2018-19ம் ஆண்டிற்கான மடிக்கணினியை பெற 16ம் தேதி கடைசி நாள்
2017-18 மற்றும் 2018-19 -ஆம் ஆண்டுகளில் பயின்ற மாணவர்கள், இலவச மடிக்கணினி பெற 16-ஆம் தேதி கடைசி நாள். பள்ளிக்கல்வித்துறை பள்ளிக் கல்வித் துறையின் இணை இயக்குனர் சுகன்யா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 16ஆம் தேதிக்குள் கூடுதலாக இலவச மடிக்கணினிகள் தேவைப்பட்டால் அவற்றை பெறுவதற்கு தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மடிக்கணினிகள் மீதம் இருந்தால் அது குறித்த விவரங்களை 17ஆம் தேதிக்குள் பள்ளிக் கல்வித் துறைக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, பள்ளி மாணவர்கள் 16ஆம் தேதிக்குள் இலவச மடிக்கணினி பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments