Breaking News

15 வயதிற்கு மேற்பட்ட கல்லாதோருக்கு எழுத்தறிவித்தல் திட்டப் பணி

      பள்ளிக் கல்வித்துறை விருதுநகர் மாவட்டத்தில் 15 வயதிற்கு மேற்பட்ட கல்லாதோருக்கு எழுத்தறிவித்தல் திட்டப் பணியை செயல்படுத்திடும் பொருட்டு பார்வையில் காணும் அரசாணை எண் . 191ன் படி Special Adult Education Programme - Aspirational District -------- School Name என்ற பெயரில் மையம் தொடங்கப்பட்டுள்ள அனைத்து பள்ளிகளிலும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் தனியாக புதிய சேமிப்பு வங்கிக் கணக்கு எண் துவங்கப்படவும் , அக்கணக்கை பள்ளித் தலைமையாசிரியர் மற்றும் அப்பள்ளிக்குரிய ஆசிரியர் பயிற்றுநர் இணைந்த கணக்காக ( Joint Account ) பராமரிக்கவும் அறிவுறுத்தப்படுகிறது .


     ஒரு ஆசிரியர் பயிற்றுநருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட மையத்திற்கு பொறுப்பாளராக செயல்பட்டால் அப்பள்ளிகளில் பள்ளித் தலைமையாசிரியர் மற்றும் உதவி ஆசிரியர் இணைந்த கணக்காக ( Joint Account ) பராமரிக்கவும் அறிவுறுத்தப்படுகிறது . மேற்காணும் தகவல்களை தேர்ந்தெடுக்கப்பட்ட மையத்தின் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவித்து 19 . 12 . 2019க்குள் புதிய சேமிப்பு வங்கிக் கணக்கு துவங்கப்பட்டதற்கான அறிக்கை மற்றும் வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்கத்தின் நகலைப் பெற்று வட்டார வளமையத்தில் பராமரிக்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது .





No comments