ரயிலின் கடைசி பெட்டியில் எதற்காக X குறியீடு எழுதப்பட்டுள்ளது
ரயிலின் கடைசிப்பெட்டியின் பின்பக்கத்தில் X-ன்னு கொடுக்கப்பட்டு இருக்கும். தொடர்வண்டிகளின் பயன்பாடு குறித்த பலரும் பலது அறிந்திருந்தாலும், ரயில்வே செயல்பாடுகளில் பின்பற்றப்படும் சில விஷயங்கள் இன்றும் நம்மை வியப்பிற்குஉள்ளாக்குகின்றன. அப்படிப்பட்ட ஒரு விஷயம் தான் ‘X’. இந்தியாவில் மக்கள்பயணம்செய்யக்கூடிய எல்லா ரயில்களின் கடைசிப்பெட்டியில் ‘X’ என்ற குறி மஞ்சள் நிறத்தில் வரையப்பட்டு இருக்கும். இது ஆங்கில எழுத்தான எக்ஸா..? அல்லது இதற்கு வேறு பொருள் உள்ளதா..? ஒரு ரயில் முழுமையடைந்த நிலையில் உள்ளது, அதில் எந்த பழுதோ அல்லது பிரச்சனையோ இல்லை என்பதை குறிக்க ‘X’ என்ற குறி பயன்படுத்தப்படுகிறது.
எஞ்சின் தொடங்கி ரயிலின் எல்லா பெட்டிகள் மற்றும் அதனுடைய இயக்கத்திறனை ஆராய்ந்த பிறகே, ‘X’ குறி ரயிலின் கடைசிபெட்டியில்வரையபடுகிறது. மேலும் ரயில்களின் இடைப்பட்ட பெட்டிகள் மற்றும்அதன்இணைப்புகளில் எந்தவிதமான பழுதோ , பிரச்சனையோ இல்லை என்பதை ‘X’ குறி குறிக்கிறது.
தொடர்ந்து இந்த குறியீட்டிற்கு கீழே சிவப்பு விளக்கு ஒன்று பொருத்தப்பட்டு இருக்கும். ஒவ்வொரு 5 நொடிக்கும் அந்த விளக்கு ஒளிரும். தற்போது மின்சாரத்தால் இயங்கும் இந்த விளக்கின் பயன்பாடு முன்னதாக எண்ணெய் கொண்டு ஒளிர்வூட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. ரயிலின் கடைசிப்பெட்டியில் நாம் கவனிக்க வேண்டிய மற்றொரு தகவலும் உள்ளது. அது தான் ‘LV’ என்ற ஆங்கில வார்த்தைகளை தாங்கிய பலகை. கடைசிப்பெட்டியின் அடிப்பகுதியில் மாட்டப்பட்டு இருக்கும் பலகையில் எழுத்துக்கள் கருப்பு அல்லது வெள்ளை நிறங்களில் எழுதப்படும் இருக்கும். ஒரு ரயில் பாதுகாப்பாக உள்ளது என்பதை துறை சம்மந்தப்பட்டபணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் தெரிந்துக்கொள்ளவே ‘LV’ எழுத்துக்களைதாங்கிபலகைகள்மாட்டப்படுகின்றன.
ஒருவேளை இந்த பலகை ரயிலின் கடைசிப்பெட்டியில் காணப்படவில்லை என்றால், ரயில் பெட்டிகள் கழன்று இருப்பதை ரயில் நிலைய அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் எளிதில் கண்டறிய முடியும். மேலும், ரயில் பெட்டிகள் கழன்று இருப்பது குறித்து நிலைய அதிகாரிகள் மற்றும் ஓட்டுனர்களுக்கும் தகவல் கொடுத்து ரயிலை நிறுத்தவும், அந்த வழித் தடத்தில் வரும் பிற ரயில்களையும் நிறுத்தவும் முடியும்.
No comments