Flash News: ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அவசர செய்தி
ஆசிரியர் தேர்வு வாரியம், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை-ஐ-க்கான 2144 காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அறிவிக்கை வெளியிடப்பட்டு 27.09.2019 முதல் 29.09.2019 வரையில் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு, தேர்ச்சி முடிவுகள் வெளியிடப்பட்டு காலிப்பணியிடங்களக்கு ஏற்ப 1:2 என்ற விகிதத்தில் சான்றிதழ் சரிபார்க்க நாடுநர்கள் அழைக்கப்பட்டு, அவர்களின் சான்றுகள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் 29.10.2019 முதல் 1.11.2019 முடிய பதிவேற்றம் செய்ய தெரிவிக்கப்பட்டதையொட்டி, நாடுநர்களினால் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் இனச்சான்று (Community Certificate) தொழில்நுட்ப காரணங்களால் பதிவேற்றம் செய்யப்பட்ட விவரங்கள் பதிவாகவில்லை. எனவே சான்றிதழ் சரிபார்ப்பதற்கு அழைக்கப்பட்ட நாடுநர்களில் இனச்சான்றினை பதிவேற்றம் செய்யாத தேர்வர்கள் 04.11.2019 முதல் 06.11.2019 மாலை 06.00 மணிக்குள் மீண்டும் ஒரு முறை இனச்சான்றினை ஆசிரியர் தேர்வு வாரியம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டுமென்பதை தெரிவிக்கலாகிறது. (இனச்சான்று பதிவேற்றம் செய்யவேண்டியவர்களுக்கு குறுஞ்செய்தி (SMS) மற்றும் மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளது).இவ்வாறு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
No comments