திருநெல்வேலி மாவட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கிடையேயான கட்டுரை, விவாத போட்டிகள்.
நாளை (11-11-19) திங்கட் கிழமை 9,10 வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான கட்டுரை எழுதும் போட்டி, நாளை மறுநாள் (12-11-2019) செவ்வாய் ஒவ்வொரு அரசு பள்ளியில் இருந்தும் தலா இரண்டு மாணவர்கள் பங்குபெறும் விவாத போட்டியும் ஐந்து கல்விமாவட்டங்களில் நடைபெறுகிறது. திலி கல்வி மாவட்டத்திற்கு பாரதியார் மாநகராட்சி உயர்நிலைபள்ளி,சேரன்மகாதேவி கல்வி மாவட்டத்தில் பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளி, தென்காசி கல்வி மாவட்டத்தில் ஐ சி ஐ ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, வள்ளியூர் கல்வி மாவட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி வள்ளியூர், சங்கரன்கோவில் கல்வி மாவட்டத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சங்கரன்கோவில் இம்மையங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன. இதுகுறித்த மெயில் அனைத்து அரசு உயர்நிலை மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இப்போட்டிகள் சிறப்பாக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இத்தகவலை நம் அருகாமையில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கு மட்டும் பகிர அன்புடன் வேண்டுகிறேன். உங்கள் அன்பு சகோதரர் ஆவுடையப்ப. குருக்கள். திறனறிவு போட்டிகள். மாவட்ட ஒருங்கிணைப்பாளர். ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி. திருநெல்வேலி மாவட்டம்.
No comments