50 சதவீதத்திற்கும் குறைவாக தேர்ச்சி இருந்தால் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி
காலாண்டு தேர்வில் 50 சதவீதத்துக்கும் குறைவாக தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் முதுநிலை ஆசிரியர்களுக்கு வரும் 30-ம் தேதி சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதுகுறித்து சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அனிதா, அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர் களுக்கு அனுப்பியுள்ள சுற் றறிக்கையில் கூறியிருப் பதாவது:சென்னை மாவட்டத்தில் ஆசிரியர்களின் திறன்களை மேம்படுத்த பல்வேறு நட வடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நடப்பு கல்விஆண்டில் காலாண்டுத் தேர்வில் பிளஸ் 2 வகுப்பில் 50 சதவீதத்துக்கு குறைவாக தேர்ச்சி வீதம் பெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் முதுநிலை ஆசிரியர்களுக்கு வரும் நவம்பர் 30-ம் தேதி சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள் ளது.
இதில் வணிகவியல், வேதியியல், இயற்பியல், கணிதம், பொருளியல் உள் ளிட்ட பாடங்களின் ஆசிரியர் கள் தவறாமல் பங்கேற்க தலைமை ஆசிரியர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பயிற் சிக்கு ஆசிரியர்கள் பாடப்புத் தகங்களை கொண்டுவர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments