12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான கட்டணத்தை செலுத்த கால அவகாசம்
பிளஸ் 2 பொது தேர்வுக்கான கட்டணங்களை, வரும், 29ம் தேதிக்குள் செலுத்துமாறு, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு தேர்வுகள் இயக்குனர் உஷாராணி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்கள், செய்முறை பாடங்கள் இருந்தால், தேர்வு கட்டணமாக, 200 ரூபாயும், மதிப்பெண் சான்றிதழுக்கு, 20; சேவை கட்டணம், 5 என, 225 ரூபாய் செலுத்த வேண்டும்.
செய்முறை இல்லாத பாடங்களுக்கு, 175 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மாணவர்கள், இந்த கட்டணத்தை செலுத்த வேண்டாம். மெட்ரிக் மற்றும் ஆங்கிலோ இந்திய பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், இந்த தேர்வு கட்டணத்தை செலுத்த வேண்டும். மாணவர்களிடம் பெறப்படும் கட்டணத்தை, 29ம் தேதிக்குள், 'ஆன்லைன்' வழியே, தேர்வு துறைக்கு செலுத்த வேண்டும்.இவ்வாறு, அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments