Breaking News

10-ம் வகுப்பு ஆங்கில வினாத்தாளில் மனப்பாடத்துக்கு அதிக முக்கியத்துவம் இல்லை

10-ம் வகுப்பு ஆங்கிலம்

புதிய மாதிரியிலான ஆங்கில வினாத்தாளில் மனப்பாடத்துக்கு அதிக முக்கியத்துவம் இல்லை. மாணவர்களின் பார்வையில் இது, 40% எளிமையாகவும், 40% சராசரியாகவும், 20% சற்றுக் கடினமாகவும் அமைந்துள்ளது. மனப்பாடப் பகுதியில் சாய்ஸ் இல்லாதது, மொழித் திறனுக்கு முக்கியத்துவம் தந்திருப்பது ஆகியவற்றால் கடினமாக தோன்றலாம். மொழித் திறன் வளர தரமான ஆங்கில தினசரியை அன்றாடம் அரை மணிநேரமேனும் வாசிக்கலாம். பாடநூலின் கதைகள், இதரக் கதைகளை ஆங்கிலத்தில் வாசிப்பதும் மொழித் திறன் வளர்க்க உதவும்.

1 மற்றும் 2 மதிப்பெண் வினாக்கள்

வினாத்தாளில், ஒரு மதிப்பெண் வினாக்கள் 14, 2 மதிப்பெண் வினாக்
கள் 10, 5 மதிப்பெண் வினாக்கள் 10 மற்றும் 8 மதிப்பெண் வினாக்கள் 2 என்பதாக அமைந்துள்ளன. இவற்றில் வழிகாட்டுதலுக்கு அவசியமான 1 மற்றும் 2 மதிப்பெண் வினாக்களை சற்று விரிவாக பார்த்து விடுவோம்.

1 மதிப்பெண் பகுதி

Synonyms/Antonyms (வினா எண்1-6), Singular/Plural (வி.எண்.7), Prefix/Suffix (வி.எண்.8), Abbreviation/Acronym (வி.எ.9), Phrasal verb (வி.எ.10),
Compound word (வி.எ.11), Preposition (வி.எ.12), Tense (வி.எ.13), Linker (வி.எ.14) என்பதாக அமைந்துள்ளன. வினாவை படித்து புரிந்துகொண்டதும், கொடுக்கப்பட்ட விடைகளில் இருந்து சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுத வேண்டும். குழப்பத்தை தவிர்க்க விடையை உறுதி செய்த பின்னர் அதை கொடுத்துள்ள விடைகளில் சரிபார்த்துக் கொள்வது உதவும்.

2 மதிப்பெண் பகுதி

கொடுக்கப்பட்ட 4 வினாக்களில் ஏதேனும் 3-க்கு விடையளிப்பதான Section-I ( வி.எண் 15-18), Section-II (வி.எண் 19-22) ஆகியவை முறையே Prose மற்றும் Poetry பகுதிக்கானது. இவற்றில் முழு மதிப்பெண் பெறபாடங்களுக்கு இடையிலும் பாடத்தின் பின்பகுதியிலுமாக உள்ள அனைத்து குறுவினாக்களையும் படிப்பதும், பாடல் வரிகளில் ஒன்று விடாது பொருளறிந்து வாசித்திருப்பதும் உதவும்.

section-III பகுதி:

Active/Passive voice தொடர்பான வி.எண்.23-க்கு, பாட நூலின் பக்கம் எண்.14-ல் கொடுக்கப்பட்ட விளக்கங்களை திருப்புதல் செய்யலாம். Direct/Indirect speech (வி.எண்.24) வினாவுக்கு பயிற்சிகளை எழுதிப் பார்ப்பது அவசியம். Punctuation (வி.எண்.25), Simple, Complex & Compound (வி.எண்26) மற்றும் Coherent order (வி.எண்27) பகுதிகளின் அடிப்படை விதிகளை புரிந்து விடையளிக்க வேண்டும்.

கட்டாய வினாவான Road map (வி.எண்28) பகுதியில், ‘வழிகாட்டுதலுக்கு அடிப்படையான திசைகளை குறிப்பிடும் வார்த்தைகளில்’ பயிற்சி மேற்கொள்வது அவசியம்.

பாடக் குறிப்புகளை வழங்கியவர்: க.முத்துராமன், பட்டதாரி ஆசிரியர்- ஆங்கிலம், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, பட்டுக்கோட்டை, தஞ்சை மாவட்டம்.

அதிக மதிப்பெண்களுக்கு

    பாட வரிசையை விட வினாத்தாளின் வினா வரிசையின் அடிப்படையிலே படித்துப் பழக வேண்டும். இதற்காக பிரத்யேக குறிப்பேட்டில் முக்கியமானதை தொகுத்து வைப்பது திருப்புதலுக்கு உதவும். படிப்பதுடன் எழுதிப் பார்ப்பதும் அவசியம். பத்திகளில் Tense, எழுத்துப்பிழை, நிறுத்தற்குறிகள் ஆகியவற்றுக்கும் முக்கியத்துவம் தர வேண்டும். ஆங்கிலத்தில் சதம் பறிபோவதற்கு இலக்கணம், எழுத்துப் பிழை மற்றும் நிறுத்தற்குறிகளே காரணமாகின்றன. கதைப் பகுதியின் நிகழ்வுகளை உரிய வரிசையில் எழுத வேண்டும்.

தவிர்க்க வேண்டிய தவறுகள்

     ஒரு மதிப்பெண் பகுதியில் விடையுடன் உரிய வரிசை எண் மற்றும் சரியான விடைக்கான ‘ஆப்ஷன்’ என்பதை மறக்காது குறிப்பிட வேண்டும். வி.எண் 19-23 வரையிலான Appreciation questions பகுதியில் இடம்பெறும் a,b என்பதிலும் இந்தக் கவனம் தேவை.

    வி.எண்.39-ல் பல தவறுகளை மாணவர்கள் செய்கிறார்கள். விடையளிப்பில் பென்சில் பயன்படுத்துவதால், வினா எண் எழுத மறக்கிறார்கள். ஒரு முழு பக்கத்தை முழுமையாக ஒதுக்கி அதில் விளம்பரத்தை வரைய வேண்டும்.

     ஒரு பக்கத்தின் பாதியில் தொடங்கி மறு பக்கத்தில் மீதியை முடிப்பதை தவிர்க்க வேண்டும். முகவரி பகுதியில் சொந்த முகவரி, தொலைபேசி எண் எழுதுவது கூடாது. இந்தப் பகுதியில் வண்ணங்களைத் தவிர்க்க வேண்டும்.

    குறிப்புகளை விரித்து எழுதும் துணைப்பாடப் பகுதியில், Simple past Tense பயன்படுத்தினால், Tense தொடர்பான தவறுகளைத் தவிர்க்கலாம். இது 8 மதிப்பெண் பகுதி என்பதால் 3 பத்திக்கு குறையாது எழுதுவதும் அவசியம். தலைப்பிடுதல், பாடம் உணர்த்தும் நீதி ஆகியவற்றுக்கும் மதிப்பெண் உண்டு.

தேர்ச்சி நிச்சயம்

     வி.எண்15-18-க்கு, முதல் 4 பாடத்தின் குறுவினாக்களை படிக்கவும். முதல் 4 பாடங்களை மட்டுமேனும் முழுமையாக படித்தால் இதர பகுதிகளிலும் கூடுதல் மதிப்பெண்களை உறுதி செய்யலாம். அதே போன்று வி.எண் 19-23-க்கு, பாடல் பகுதியின் முதல் நான்கைப் படித்தாலே விடையளித்து விடலாம்.

   Antonyms பகுதியில் எழுத்துக்கள் சற்றே மாறி அமைந்திருப்பதை அடையாளம் காண்பது, singular/Plural பகுதிக்கு ஆசிரியர் வழங்கிய கணித சூத்திர மாதிரி, Punctuation பகுதிக்கான அடிப்படை விதிகள், Road Map வினாவில் திசையறிதலுக்கான அடிப்படை கட்டளைகள் போன்றவற்றை படித்து பின்பற்றினாலே கணிசமான மதிப்பெண்களைப் பெறலாம்.

   Poem Paraphrase (வி.எ.36) பகுதிக்கு செய்யுள் வரிகளை அடிக்கடி வாசிந்திருந்தால் விடையளித்து விடலாம். எளிமையான Advertisement பகுதியை தவிர்க்காது விடையளித்தால் குறைந்தது பாதி மதிப்பெண்களை பெறலாம். வி.எண் 42, Picture Description-க்கு பொதுவான அம்சங்களை விளக்கும் வரிகளை எழுதி, கூடுதலாய் தெரிந்த ஓரிரு பதில்களையேனும் எழுதலாம்.

     வி.எண்43-ல்be verb, Article, prepositions ஆகியவற்றை அகற்றிவிட்டு Hyphen இட்டு எழுதுவது இப்பகுதியின் குறைந்த பட்ச மதிப்பெண்ணை உறுதி செய்யும். இதேபோல வி.எண் 46-ல் Hyphen-ஐ அகற்றிவிட்டு be verb சேர்த்து பயிற்சி செய்தாலும் கணிசமான மதிப்பெண் கிடைக்கும்.






No comments