பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் அட்டை தாரர்களுக்கு ரூ.1000 பரிசு முதலமைச்சர் அறிவிப்பு
ஏழை, எளிய மக்களும் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியோடு கொண்டாடும் வகையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, முந்திரி, திராட்சை அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு இந்த ஆண்டும் வழங்கப்படும். அதேப்போல, பொங்கல் பரிசுத் தொகுப்புடன், ரூ.1000 பரிசுத் தொகையும் வழங்கப்படும் என்று கள்ளக்குறிச்சி துவக்க விழாவில் சிறப்புரையாற்றிய முதல்வர் பழனிசாமி அறிவித்தார். ரேஷன் அட்டை வைத்துள்ள அனைவருக்கும் பொங்கல் பண்டிகைக்கு ரூ.1000 வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.மேலும், பொங்கல் வைப்பதற்கான ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, முந்திரி, திராட்சை பொங்கல் பரிசு தொகுப்பு தரப்படும் என்று தெரிவித்துள்ளார்.
No comments