போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கிடையாது - பள்ளிக்கல்வித்துறை
முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்விற்கான 1579ஆசிரியர்களை கொண்ட பட்டியலை பள்ளிக்கல்வித்துறை தயார் செய்துள்ளது . அதற்கு சில விதிமுறைகளும் வகுக்கப்பட்டுள்ளன. அதில் துறைரீதியான எந்தவித நடவடிக்கைக்கும் ஆசிரியர் உட்பட்டிருக்கக்கூடாது என்பது முக்கியமான விதியாகும். இதனால் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் 17-பி பிரிவின் கீழ் நடவடிக்கைக்கு உள்ளாகியுள்ள 300 க்கும் அதிகமான ஆசிரியர்கள் பதவி உயர்வு வாய்ப்பை இழந்துள்ளனர். இதேபோல் பல முதுகலை ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான வாய்ப்பையும் இழந்துள்ளனர். பள்ளிக்கல்வித்துறையின் இந்த அறிவிப்பால் ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
No comments