NMMS தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வுக்காக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது
NMMS தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வுக்காக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத்தின் கீழ் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மத்திய அரசின் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் மூலம் படிப்புதவித் தொகை வழங்கப்படுகிறது.உதவித் தொகை வழங்க மாணவர்களைத் தேர்வு செய்வதற்காக NMMS தேர்வு அனைத்து வட்டார அளவில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு தேதி 01.12.2019 (ஞாயிற்றுக்கிழமை) இத்தேர்விற்கான விண்ணப்பங்களை 26.09.2019 முதல் 11.10.2019 வரை இத்துறையின் www.dge.gov.in என்ற வலைத்தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாணவர்கள் தாம் பயிலும் பள்ளித் தலைமையாசிரிடம் 16.10.2019 தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் கூடுதல் விவரங்கள் மற்றும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்க் ஐ கிளிக் செய்யவும்.
For Notification Download Click here
For Application Download Click here
No comments