Breaking News

புதிய ஆசிரியர் பணி நியமனத்திற்கு தடை

அரசு உதவி பெறும் பள்ளிகளில் புதிய ஆசிரியர் நியமனத்துக்குத் தடை விதித்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: அனைத்து வகை அரசு உதவி பெறும் பள்ளிகளும் பணிநிரவல் அடிப்படையில் மட்டுமே ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிக் கொள்ள வேண்டும். மாவட்ட அளவில் உபரியாக உள்ள ஆசிரியர்களைக் கொண்டு காலி பணியிடங்களை நிரப்பிக் கொள்ள வேண்டும். கூடுதலாக ஆசிரியர்கள் தேவைப்படும் பட்சத்தில் வேறு மாவட்டங்களில் உள்ள உபரி ஆசிரியர்களைக் கொண்டு பணிநிரவல் செய்ய வேண்டும். இவ்வாறு பணிநிரவல் செய்வதால் கூடுதல் நிதி இழப்பு தவிர்க்கப்படுவதுடன், பணிப் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments