Breaking News

ஒன்றியத்திற்குற்பட்ட 40 பள்ளிகளில் புறமதிப்பீடு குழுவாக சென்று ஆய்வு செய்ய உத்தரவு

    2018-19 ஆம்‌ கல்வியாண்டில்‌, பள்ளித்தரநிலை மற்றும்‌ மதிப்பீட்டுத்‌ திட்டத்தின்‌ சுயமதிப்பீடு அனைத்துப்‌ பள்ளிகளிலும்‌ முடிக்கப்பட்டு, புறமதிப்பீடு மேற்கொள்வதற்கான வழிகாட்டுதல்கள்‌ மாவட்டங்களுக்கு தெரிவிக்க மாநில அளவிலான கூட்டம்‌ நடத்தப்பட்டு, ஒன்றியத்திற்கு 20  பள்ளிகள்‌ வீதம்‌ அனைத்து மாவட்டங்களிலும்‌ புறமதிப்பீடு மேற்கொள்ளப்பட்டது. இதனைத்‌ தொடர்ந்து, இக்கல்வியாண்டிலும்‌ பள்ளிகளில்‌ கீழ்க்காணும்‌ அறிவுரைகளைப்‌ பின்பற்றி புறமதிப்பீடு மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. ஒன்றியத்திற்கு 40 பள்ளிகள்‌ வீதம்‌ அனைத்து ஒன்றியங்களிலும்‌ 2 அல்லது 3 குழுக்கள்‌ அமைத்து இப்புறமதிப்பீடு மேற்கொள்ள வேண்டும்‌. சென்ற கல்வியாண்டில்‌ புறமதிப்பீடு மேற்கொண்ட பள்ளிகளை தவிர்த்து மீதமுள்ள பள்ளிகளில்‌ 40 பள்ளிகளை தேர்ந்தெடுக்க வேண்டும்‌. 

    ஒன்றியத்தில்‌ அனைத்து வகை (தொடக்க, நடுநிலை, உயர்‌ மற்றும்‌ மேல்நிலைப்‌ பள்ளிகள்‌) பள்ளிகளில்‌ இருந்து 40 பள்ளிகளைத்‌ தேர்ந்தெடுக்க வேண்டும்‌. அனைத்து குறு வள மையங்களிலிருந்தும்‌ பள்ளிகளைத்‌ தேர்ந்தெடுக்க வேண்டும்‌. ஒன்றிய வாரியாக புறமதிப்பீட்டிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளின்‌ பெயர்பட்டியலை 27.09.2019-க்குள்‌ மாநிலத்‌ திட்ட இயக்ககத்திற்கு தெரிவித்தல்‌ வேண்டும்‌. புறமதிப்பீடு குழுக்கள்‌ அமைப்பதற்கான அறிவுரைகள்‌ இணைக்கப்பட்டுள்ளன. அதனை பின்பற்றவும்‌ அறிவுறுத்தப்படுகிறது. பள்ளிகளில்‌ புறமதிப்பீடு 03.10.2019 முதல்‌ 30.11.2019 வரையிலும்‌ மேற்கொள்ள வேண்டும்‌. புறமதிப்பீடு மேற்கொள்ள பள்ளி ஒன்றுக்கு ரூ. 600/- ஒதுக்கீடு செய்யப்பட்டு, அத்தொகை மாவட்டங்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது.உ. இத்தொகையை புறமதிப்பீட்டாளர்‌ குழுவிற்கான போக்குவரத்து, புறமதிப்பீடு படிவ நகல்‌ (௨ நகல்‌) எடுத்தல்‌ மற்றும்‌ இப்பணி தொடர்பான இதர செலவினங்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்‌.  மாவட்டங்களுக்கு விடுவிக்கப்பட்ட தொகையை 05.10.2019-க்குள்‌ புறமதிப்பீட்டிற்காக தெரிவு செய்யப்பட்ட பள்ளிகளின்‌ பள்ளி மேலாண்மைக்‌ குழுவிற்கு விடுவித்தல்‌ வேண்டும்‌.

         இச்செலவினம்‌ மாவட்ட பள்ளித்‌ தரநிலை மற்றும்‌ மதிப்பீடு தலைப்பின்‌ கீழ்‌ மேற்கொள்ளப்பட வேண்டும்‌. ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை பள்ளிகளில்‌ புறமதிப்பீடு மேற்கொள்ளப்பட்ட அன்றே புறமதிப்பீட்டுக்‌ குழுவினரிடம்‌ கொடுத்து செலவினம்‌ மேற்கொள்ளப்பட்டு அதற்கான பற்றுச்‌ சீட்டு புறமதிப்பீட்டாளர்களின்‌ கையொப்பத்துடன்‌ பெற வேண்டும்‌. செலவினம்‌ மேற்கொள்ளப்பட்டதற்கான பயன்பாட்டுச்‌ சான்றிதழை சார்ந்த தலைமையாசிரியரிடம்‌ பெற்று மாவட்டத்‌ திட்ட அலுவலகத்திற்கு 05.12.2019-க்குள்‌ சமர்பிக்க வேண்டும்‌. அதேபோல்‌ மாவட்ட அளவில்‌ ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகைக்கான பயன்பாட்டுச்‌ சான்றிதழ்‌ 15.12.2019-க்குள்‌ மாநிலத்‌ திட்ட இயக்ககத்திற்கு தவறாது சமர்பிக்க வேண்டும்‌. மேற்காண்‌ அறிவுரைகளையும்‌ இணைக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளையும்‌ பின்பற்றி பள்ளிகளில்‌ புறமதிப்பீடு மேற்கொள்ள அனைத்து முதன்மைக்‌ கல்வி அலுவலர்களும்‌ அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.



No comments