2020 ம் நடைபெறும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு புதிய கால அட்டவணை
2019-2020 ஆம் ஆண்டிற்கான பொதுத்தேர்வு அட்டவணையினை தமிழக கல்வித்துறை வெளியிட்டது.இரண்டு தாள்களாக நடத்தப்பட்ட தமிழ் மற்றும் ஆங்கில பாடங்கள் இரண்டு தாள் முறை ரத்து செய்யப்பட்டு, ஒரு தாளுக்கு மட்டுமே தேர்வு நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்தது. இதன் தொடர்ச்சியாக பொதுத்தேர்வு கால அட்டவணை மாற்றப்படுள்ளது இதன் மூலம் மாணவர்களின் பாடச்சுமை குறையும்.இதன்படி, 2020 மார்ச், 27ல் தேர்வு துவங்க உள்ளது.தேர்வு கால அட்டவணை பின்வருமாறு...
27-03-2020 - தமிழ் உள்ளிட்ட மொழி பாடம்
28-03-2020 - விருப்ப மொழி பாடம்
31-03-2020 - ஆங்கிலம்
03-04-2020 - சமூக அறிவியல்
07-04-2020 - அறிவியல்
13-04-2020 - கணிதம்
தேர்வு முடிவு வெளியாகும் நாள்: 04-05-2020
No comments